Sunday 16 September 2012

தோல்விப்பயணம்

பாதைகள் மறந்து 
பயணங்கள் 
மட்டுமே மிஞ்சுகிறது 
என் பயணங்களில் ......

வெற்றி நோக்கிய
வழி இதுவென 
எடுத்துவைக்கும் அடிகளுக்கு 
மட்டும்தான் தெரியும் 
அது தோல்வியாய்ப்போன 
நொடிகளின் வலி....

எட்டிப்பிடிக்கும் தொலைவில்
வெற்றிக்கனி..!
எட்டிப்பிடிக்கும் முன்
தொலைந்து விடுகிறது 
எட்டாக்கனியாகவே ....

உலகே 
தோல்விமயமென 
பிதற்றிக்கொண்டேத்  தேடுகிறேன்
தோல்வியில்லா உலகை... 

ஒரு திசைக்கு
மறு திசை 
காத்திருக்கிறது
இன்னுமொரு தோல்வி ...

அனுபவித்து
அனுபவித்து 
அலுத்துப்போன 
தோல்வியில்தான் தெரிகிறது 
வெற்றிபெறும் நம்பிக்கை
என்னிலும் 
உண்டென்று......

1 comment:

  1. கவிதை செம சூப்பர் ,கலக்குறிங்க போங்க :) :) இந்த சின்ன வயசுல என்ன ஒரு திறமை !!!!!!!!!!

    ReplyDelete