Tuesday 15 July 2014

நகர வாசம்

இரயிலின்
ஜன்னல் பசுமை வழி
பயணிக்கிறது
பிறந்த ஊரும்
இளமையின் பசுமைகளும்....

Friday 11 July 2014

விடியாத இரவு



விடியாத இந்த இரவு
விடியாமலே நீளட்டும்....
விடிந்தால் வாழ வேண்டும்
மீண்டும் ஒரு முறை....

Wednesday 9 April 2014

காயங்கள்

பகிராத மகிழ்ச்சியும்
ஏற்படுத்தவே  செய்கிறது
சில
ஆறாத காயங்களை....



Monday 31 March 2014

பள்ளிச் சுற்றுலா.....




மங்கியப் புகைப்படத்தில்
மிச்சமிருக்கிறது
மறந்து போன
பள்ளிச் சுற்றுலா.....

Saturday 28 September 2013

குழந்தையின் சிரிப்பில்...

கண் சிமிட்டிச் சிரிக்கும்
அறிமுகம் இல்லா குழந்தையின்
கண்களில் தெரிகிறது
நம்
முன் ஜென்மத்து
மிச்சங்கள்....

Saturday 15 June 2013

இரவுத் துணைவன்



















உறக்கமற்று
புரண்டுபடுக்கும்
பல
அமைதியான இரவுகளில்
திடீரென தோன்றுகிறாய்
என் துணையாக!
உன் உடனிருப்பை
உணரும்
அந்நொடிகள்
மிக மிக
இனிமையானவை !

மிக மிக வேகமாய்
ஓடும் நாட்கள்
இத்தனை
நீண்ட நொடிகளை
உடையதா ?
ஆச்சரியம்தான்
உன் பேச்சுமொழி!

நீண்டு கொண்டே
செல்லும்
உன் பேச்சுமொழி
தாலாட்டாய்
மாறும் நொடி
இதுவரை
இரகசியம்தான்!

இரவுகளின்
இரகசியங்களை
பேசிக்கொண்டே திருடும்
உன் வாக்கியத்தின்
அர்த்தம் அறிய
நானும்
அறிய வேண்டும்
உன் இயந்திர மொழி!

என்
பல இரவுகளின்
துணையான
உன் இடத்தில்
பகலில் தெரிகிறது
ஒரு கடிகாராம் மட்டுமே!!

Thursday 4 April 2013

நட்பின் முகங்கள்

எங்கோ,
என்றோ ,
கேட்டப்
பாடலின் வரிகளைப்போல்
நம்மை அறியாமல்
அவ்வப்போது
நினைவில் வந்துவிடுகின்றன
பிரிந்து
பல நாட்களான
நட்பின் முகங்கள்..